அருள்பணி ஜோசப் கான்ஸ்டான்டின் பெஸ்கி அவர்கள் எழுதிய “தேம்பாவணி” என்ற நூலை நன்கு புரட்டி பார்த்தேன். அவரது படைப்பிலிருந்து என்னை அதிகம் ஈர்த்த மலர்களை சேகரித்து, மாலையாக தொடுத்து, அன்னைமரி காவியத்தை உருவாக்கினேன்.இது கற்பனை கதையல்ல, உண்மை வரலாறு. இந்நூலில் வரலாற்றை வண்ணமயமாக சித்தரிக்க என் கவிநயத்தை புகுத்தினேன்.அருள்பணி ஜோசப் கான்ஸ்டான்டின் பெஸ்கி, “தேம்பாவணி” என்ற படைப்பின் மூலம் அன்னைமரியின் பெருமையை பாடியவர். அவரின் கவிநயமும் வரலாற்றையும் இணைத்து, அன்னைமரியின் திருக்கதையை எம்முன் கொண்டுவந்துள்ளார்.
எழுத்தாளர்
"இறையன்னையைப் பற்றிய இறையியல் கற்றுத் தருவதற்காக வல்ல இந்தக் காவியம். மாறாக இறையன்னைமீது கொண்டுள்ள அளவு கடந்த பற்றுதலையும் வணக்கத்தையும் வெளிக் கொணர்வதோடு பிறரும் அன்னையின் அரவணைப்பையும் ஆதரவையும் நாட, அடைய தூண்டுதல் தருவதாக அமைந்துள்ளது. இவற்றைப் படிக்கும்போது புனித இடங்களுக்குப் புனிதப் பயணம் மேற்கொள்கின்றோமோ என்ற உணர்வும் தோன்றுகின்றது"
"தோழர் ໙. மரியாள் நேசன் அன்னை மரியாவின் அன்புக்கு அடிமையானவர். பெற்றுக்கொண்ட கல்வியறிவோடு சேர்த்துக் காவியம் பாடுவதற்குரிய புலமையும் தனது சிந்தனை முயற்சியால் அடைந்துள்ளார். வாசிப்பை நேசிப்பவர். வரலாற்று நூல்களை ஆர்வமுடன் படிப்பவர். புதியவை படைப்பதில் முனைப்பு கொண்டவர். சிறு வியாபாரம் செய்து தனது குடும்பத்தைக் காத்துவரும் நெருக்கடியின் மத்தியிலும் கிடைத்த நேரங்களில் வாசிப்பதையும் எழுதுவதையும் தவறாது செய்து வருபவர். அன்னை மரியாளின் மேல் அளப்பரிய அன்பு கொண்டவர்
ஒரு நாள் தன் படுக்கையில் இருந்தபோது ஏன் மரியாவின் வாழ்வு அவர் வரலாறு பற்றி கவிதையில் ஒறு நூல் படைக்கப்படக் கூடாது என்ற எண்ணம் எழுந்தபோது அதர்கான நூல்கள் தேடி வாசித்து உள்வாங்கி எழுதப்பட்டதுதான் இந்நூல். இந்நூல் எழுதத் தொடங்கியதில் இருந்து தன்னுள் மனமாற்றம் நிகழ்ந்து அவர் ஒரு புதிய வாழ்க்கையை வாழ்வதாக உணர்கிறார்.
“இறையன்னையைப் பற்றிய இறையியல் கற்றுத் தருவதற்காக வல்ல இந்தக் காவியம். மாறாக இறையன்னைமீது கொண்டுள்ள அளவு கடந்த பற்றுதலையும் வணக்கத்தையும் வெளிக் கொணர்வதோடு பிறரும் அன்னையின் அரவணைப்பையும் ஆதரவையும் நாட, அடைய தூண்டுதல் தருவதாக அமைந்துள்ளது. இவற்றைப் படிக்கும்போது புனித இடங்களுக்குப் புனிதப் பயணம் மேற்கொள்கின்றோமோ என்ற உணர்வும் தோன்றுகின்றது”
“ஒருநாள் தன் படுக்கையில் இருக்கும்போது ஏன் மரியாவின் வாழ்வு அவர் வரலாறு பற்றி கவிதையில் ஒரு நூல் படைக்கப்படக் கூடாது என்ற எண்ணம் எழுந்தபோது அதற்கான நூல்கள் தேடி வாசித்து உள்வாங்கி எழுதப்பட்டதுதான் இந்நூல். இந்நூல் எழுத ஆரம்பித்ததிலிருந்து. தன்னுள் மனமாற்றம் நிகழ்ந்து தான் ஒரு புதிய வாழ்வு வாழ்வதை உணர்கிறார். இவரைப் போன்று இதை வாசிப்போரும் கடவுளின் தாய் மீதுள்ள அன்பினால் உந்தப்பட்டு நல்ல கிறிஸ்தவ வாழ்வு வாழ மரியாள் காவியம் துணை செய்யும்”
99949 83523
80/3, ஜோதி கிராஸ் தெரு, கிறிஸ்துநகர், நாகர்கோவில்-3